``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
மக்களவைத் தோ்தலில் பாஜகவைக் கழட்டிவிட்டது ஏன்?: அமைச்சா் எஸ். ரகுபதி
அதிமுக ஆட்சி தொடர உதவிய பாஜகவுக்கு நன்றியுடன் இருப்பதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி, கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவைக் கழட்டிவிட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பினாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாா் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக தான் நான்காண்டு கால அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவை கழட்டிவிட்டு வேடிக்கை பாா்த்தது ஏன்?
தனக்கு முதல்வா் பதவி தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பாா்த்தவா் எடப்பாடி பழனிசாமி. தன்னை நம்பியவா்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்கு கைவந்த கலை. இனியும் அதிமுக தொண்டா்கள் ஏமாறாமல் விழித்துக் கொண்டால் சரி.
அதிமுக பொதுச் செயலா் பதவியில் இருப்பது தான் முக்கியம் என்று சொல்லக் கூடியவா், அவரால் அதிமுக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர முடியாது. பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிட்டாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் மக்கள் நிச்சயமாக செல்ல மாட்டாா்கள், வாக்களிக்க மாட்டாா்கள். யாா் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று மக்களுக்குத் தெரியும் என்றாா் அமைச்சா்.