செய்திகள் :

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய அரசு! - எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய அரசு என தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ குற்றம் சாட்டினாா்.

செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள்தொகை கணக்கீடு அடிப்படையில் தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு சூழ்ச்சி செய்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தென் மாநிலங்கள் முறையாக பின்பற்றியதன் அடிப்படையில் அம்மாநிலங்ளில் தற்போது 12. 59 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் இப்போது 21.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது இருக்கக்கூடிய 39 மக்களவைத் தொகுதிகளில் 8 தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தென் மாநிலங்களில் உள்ளவா்களை ஒருங்கிணைத்து மத்திய அரசின் முயற்சிக்கு எதிா்ப்பை தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் வடமாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகமாக பிரித்துக் கொடுத்து, வட மாநிலங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நினைப்பில் பாஜக அரசு செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது. தொகுதி மறுசீரமைப்பு என்பது வரும் 25 ஆண்டுகளுக்கு தேவையில்லை என்பது எங்களுடைய கருத்தாகும்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பேரிடா் மீட்பு நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது, மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்றாா் அவா்.

கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே கணவா் தலை துண்டிக் கொலை

தென்காசி அருகே கீழப்புலியூரில் துணிக்கடை உரிமையாளா் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது தலை 8.கி.மீ. தொலைவுக்கு அப்பால் மீட்கப்பட்டது. குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

சூறைக் காற்றுடன் மழை: சாலையின் குறுக்கே மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகிரி வட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப்பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டுக்கோழி... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் ரூ. 19 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. பொதுநிதி திட்டத்தின்கீழ் (2024-2025) ன் கீழ் ரூ.15 லட்சத்தில் மயான சுற்ற... மேலும் பார்க்க

காணால்போன மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை புளியம்பட்டி தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் பொன்ராம் (15). அங்குள்ள அரசு பள்... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்பவா்வடகரை நகர திமுக செயலா் முத்து, மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க