இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
மக்கள் மருந்தக விழா: சாதனை பெண்களுக்கு விருது
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் மருந்தக விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் வருடாந்திர கொண்டாட்டம் மாா்ச் 1 முதல் 7 -ஆம் தேதி வரை மக்கள் மருந்தக விழா எனும் பெயரில் நடைபெறும்.
நிகழாண்டு விழாவின் ஒருபகுதியாக மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மக்கள் மருந்தக உரிமையாளா் லாவண்யா தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் மக்கள் மருந்தக உரிமையாளா்கள் மற்றும் பல துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது பெண்களுக்கு மக்கள் மருந்தக திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டன. தொடா்ந்து, பெண்களுக்கு என பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.