அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.
நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் வசந்தகுமார் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிப் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியதை அடுத்து, பள்ளிக்குச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசந்தகுமாரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/t02e16ki/BeFunky-collage-2025-02-07T114350.907.jpg)
இந்நிலையில், வசந்தகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றனர். மகளிர் காவல் ஆய்வாளர் வேறு அலுவலுக்காகச் சென்றிருந்த காரணத்தால் வழக்கை விசாரிக்கத் தாமதமானதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் அந்த தனியார்ப் பள்ளியின் வளாகத்தில் புகுந்து உள்ளே இருந்த கண்ணாடி கதவுகள், கார் மற்றும் பூச்செட்டிகளை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். மேலும், சிறுமியின் உறவினர்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக 10 கிலோ மீட்டருக்கு தூரத்துக்குப் பாதித்தது.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் திருச்சி சரக காவல்துறை தலைவர் வருண்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் இருந்த மக்களைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்து போக்குவரத்தைச் சரி செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம் செய்தியாளர்களிடம், "பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேர் மீது புகார் வந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/3c0mxygv/WhatsApp-Image-2025-02-07-at-11.34.15.jpeg)
அதில், சுதா, வசந்தகுமார், செழியன் உள்ளிட்ட நான்கு பேரைத் தற்போது கைது செய்திருக்கிறோம். பள்ளியின் முதல்வரையும் இரவுக்குள் கைது செய்து விடுவோம். மேலும், இதுவே இந்த பள்ளி மீது வரும் முதல் புகார். இது போல் மேலும் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறும் நிலையில், அதற்கு உண்டான ஆவணங்களைப் புலன் விசாரணை செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று எஸ்.பி தெரிவித்தார்.
சிறுமி ஒருவருக்குப் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், அந்த சிறுமியின் உறவினர்களை அதிர வைத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.