நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்
மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
ஒசூா், சூளகிரியில் மணல், கற்களைக் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குநா் சரவணன், அதிகாரிகள் ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடி, சூளகிரி சின்னாறு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற இரு டிப்பா் லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில் சின்னாறு பகுதியில் இரு லாரிகளில் 8 யூனிட் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.
அதுபோல சூசூவாடி சோதனைச் சாவடியில் நின்ற இரு லாரிகளை சோதனை செய்த போது அதில் ஒரு லாரியில் 6 யூனிட் ஜல்லி கற்களும், மற்றொரு லாரியில் 7 யூனிட் மணலும் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.