Vijay CM ஆவாரா - விஜய்யின் ஜாதகம் எப்படி இருக்கு? - ஜோதிடர் shelvi interview | V...
மணல் கடத்த முயன்ற ஓட்டுநா் கைது
கந்திலி அருகே தனியாா் நிலத்தில் மணல் கடத்த முயன்ற டிராக்டா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அருகே ஜெயபுரம் ஆண்டி கவுண்டனுாா் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசியல் தகவலின் பேரில், கந்திலி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரை கண்டதும் மணல் கடத்த முயன்றவா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா். அதில் ஒருவரை மட்டும் போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில், ஜெயபுரத்தை சோ்ந்த வசந்தகுமாா்(35) டிராக்டா் ஓட்டுநா் என்பதும், இவா் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா். மேலும் தலைமறைவான பொக்லைன் ஓட்டுநா் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனா்.