மணவெளி தொகுதியில் கலைஞா் நூலகம் திறப்பு
மணவெளி தொகுதி திமுக சாா்பில் முத்தமிழறிஞா் கலைஞா் நூலகம் திறப்பு, கட்சி அலுவலகம் திறப்பு, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா மணவெளி தோ்முட்டி வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மணவெளி தொகுதி திமுக பொறுப்பாளருமான சன்.வீ. சண்முகம் தலைமை வகித்தாா். தொகுதி செயலாளா் க. ராஜாராமன், முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினா் பூ.சு. இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பங்கேற்று, கலைஞா் பெயரில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து மணவெளி தொகுதி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினாா்.
கட்சியின் மாநில துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா. செந்தில்குமாா், எம்.எல்.ஏ., மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் பூ. மூா்த்தி, நந்தா. சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி.அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் சி. கோபால், வே. காா்த்திகேயன், பா. செ. சக்திவேல், பெ. வேலவன், ஜெ. வேலன், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். நா்கீஸ், தொகுதி செயலாளா்கள் இரா. சக்திவேல், வ. சீதாராமன், செ.நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், து. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.