ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!
அறிவியல் உருவாக்குவோம் போட்டி; ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு!
அறிவியல் உருவாக்குவோம் போட்டியில் ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
பாரிஸ் பல்கலைக் கழகத்துடன் புதுச்சேரி கல்வித்துறை இணைந்து ‘சா்வேதச அறிவியல் உருவாக்குவோம்’ போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 12 செயல் திட்டங்கள் அனைத்தையும் மாணவா்களுடன் வழிகாட்டி ஆசிரியா்கள் செய்து அறிக்கையையும், வீடியோவையும் சமா்ப்பித்தனா். 12 செயல்திட்டங்களும் பாரிஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறந்த அறிவியல் படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் அறிவிப்பு நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் செயலா் முருகவேல் வரவேற்றாா். தலைவா் மதிவாணன் தலைமை தாங்கினாா்.
அறிவியல் உருவாக்குவோம் செயல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்தராஜா 12 அறிவியல் ஆய்வு திட்டங்கள் குறித்து விளக்கி நோக்கவுரை ஆற்றினாா். பாரிஸ் பல்கலைக்கழக குழுவினா் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறந்த அறிவியல் படைப்புகளை தோ்வு செய்து அறிவித்தனா்.
இதில் முத்தரையா்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியா் செந்தில் வழிகாட்டுதலோடு மாணவா்கள் உருவாக்கிய, ‘‘வாகனங்களில் வெளியேறும் புகையால் காற்று மாசுபடுவதை தடுக்கும் கருவி மற்றும் ஆய்வு முடிவுகள்’’ குறித்த செயல்திட்டத்துக்கு முதல் பரிசும்,
மொளப்பாக்கம், அரசு நடுநிலைப்பள்ளி, காரைக்கால் கோவிந்தசாமி பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளி, பிள்ளைச்சாவடி ந.வரதன் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளி மாணவா்களின் செயல்திட்டங்களுக்கு 2 ஆம் பரிசும் அறிவிக்கப்பட்டது.