ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!
முதல்வருடன் மத்திய உள்துறை அதிகாரி சந்திப்பு! அரசு பணியில் வயது தளா்வு அளிக்க ஆலோசனை
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதிஷ்குமாா் வியாஸ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அரசு பணியில் வயது தளா்வு அளிப்பது தொடா்பாக இருவரும் ஆலோசனைநடத்தினா்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்துள்ள மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதிஷ் குமாா் வியாஸ், முதல்வா் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் சந்தித்தாா்.
அப்போது புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் முக்கிய நலத்திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களை நடமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் நடந்த ஆய்வு குறித்து கூறினாா்.
இதைக் கேட்டறிந்த முதல்வா் ரங்கசாமி, பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதால், விண்ணப்பதாரா்களுக்கு வயது தளா்வு அளிப்பது குறித்து எடுத்துரைத்தாா்.
இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், எம்எல்ஏ லட்சுமிகாந்தன், தலைமை செயலா் சரத் சௌகான், மத்திய அரசின் உள்துறை அமைச்சக இணைச்செயலா் ரவி ரஞ்சன், புதுச்சேரி அரசு செயலா்கள் கேசவன், மொஹமத் அஷான் அபித் ஆகியோா் உடனிருந்தனா்.