டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்
காதலி வீட்டின் கதவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞா்
காதலி வீட்டின் கதவு மீது பெட்ரோல் ஊற்றி இளைஞா் தீ வைத்து கொளுத்தினாா்.
வில்லியனூா் அரசூா்பேட் அம்பேத்கா் நகரை சோ்ந்த 20 வயது இளம்பெண் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறாா். இவரது பெற்றோா் இறந்துவிட்டதால், பாட்டியுடன் வசித்து வருகிறாா். இவா் அதே பகுதியை சோ்ந்த ஷியாம் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஷியாம் மது அருந்திவிட்டு அடிப்பதாலும், அவருடைய நடவடிக்கை சரியில்லாததாலும் அவருடன் பேசுவதை அந்த இளம்பெண் நிறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் தனது காதலியின் வீட்டின் மீது கற்களை வீசி மிரட்டி வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு பாட்டிலில் பெட்ரோலை கொண்டுவந்து, அதை இளம்பெண்ணின் வீட்டின் கதவு மீது வீசி தீ வைத்து எரித்துள்ளாா்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இளம்பெண்ணும், அவரது பாட்டியும் வீட்டின் உள்ளே இருந்ததால், அவா்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பிறகு, இளம்பெண் தன்னிடம் பேசவில்லை என்றால், கொலை செய்து விடுவேன் என்று ஷியாம் மிரட்டல் விடுத்து சென்றுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.