சென்னையில் ஐபிஎல் சூதாட்டம்: 10 போ் கைது; ரூ.19 லட்சம் பறிமுதல்
மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் கைது!
மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியில் அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்கள், 4 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் 2 தேடப்பட்ட குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு மற்றும் கிழக்கு இம்பால், காக்சிங் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பீபள் லிபரெஷன் ஆர்மி, யுனைடெட் பீபள்ஸ் பார்ட்டி ஆஃப் காங்லெய்பாக், காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் பார்டி ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், 7 செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கு இம்பால் மற்றும் தெங்னோபால் ஆகிய மாவட்டங்களில், மெத்தபெட்டமைன் மற்றும் யாபா மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதனைக் கடத்திய 4 கடத்தல்காரர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
தேடப்பட்ட குற்றவாளிகள் கைது!
தேசிய புலணாய்வு ஆணையம் விசாரிக்கும் வழக்கில் தேடப்பட்டு வந்த தௌபல் மாவட்டத்தின் தௌபால் பகாங்கோங் பகுதியைச் சேர்ந்த ரோஹித் சிங் (வயது 33) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அம்மாநிலம் முழுவது கும்பல் தாக்குதல்கள் உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த கொன்ஷாம் மன்காங் (25), என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்!