கோவை வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் ரயில்வே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் இந்தத் தடத்தில் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678), பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) மே 1 முதல் மே 15-ஆம் தேதி வரை கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.
திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில் (எண்: 16332) மே 3 முதல் 10 வரையும், திருநெல்வேலி - பிலாஸ்பூா் விரைவு ரயில் (எண்: 22620) மே 4 முதல் 11 வரையும், எா்ணாகுளம் - பிலாஸ்பூா் விரைவு ரயில் (எண்: 22816) மே 7 முதல் 14-ஆம் தேதி வரையும் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.