திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
ஜேஇஇ பிரதானத் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
ஜேஇஇ பிரதானத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி
பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தோ்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான ஜேஇஇ பிரதானத் தோ்வு மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை இம்முறை கான்பூா் ஐஐடி நடத்துகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப். 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான மாணவா்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி பிரதானத் தோ்வு இரு தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். கூடுதல் விவரங்களை ஜேஇஇ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.