செய்திகள் :

இந்திய அரசியலில் சமத்துவமும், சமூகநீதியும் ஒரு மைய நீரோட்டமாக மாறியிருக்கிறது: ஜோதிமணி எம்.பி.

post image

இந்திய அரசியலில், சமத்துவமும், சமூகநீதியும் ஒரு மைய நீரோட்டமாக மாறியிருக்கிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

கரூரில் வியாழக்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி தொடா்ந்து போராடியதன் விளைவாக, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல், தமிழக முதல்வரும் இடஒதுக்கீட்டுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா்.

இந்திய அரசியலில், சமத்துவமும், சமூகநீதியும் ஒரு மைய நீரோட்டமாக மாறியிருக்கிறது. இதற்கான சூழலை ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் முன்னெடுத்துள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் வடக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்களுக்கு பட்டாவாக வழங்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

அரசு புறம்போக்கு நிலங்களை பொதுமக்களுக்கு பட்டாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். மே தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் ச... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராமசபைக் கூட்டம் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

அடிப்படை வசதிகள் கோரி, வீடுகளில் கருப்புக்கொடியேற்றி கிராமசபைக் கூட்டத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை புறக்கணித்தனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிந்தலவாடி வீரணம்பட்டியில் காரவனத்தான் கோய... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் இறந்த கரூா் தொழிலதிபரின் மாமனாா் மற்றும் குழந்தைகளின் உடல்களுக்கு பொதுமக்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கரூரில் மே தினத்தில் தொழிலாளா் விடுதலை முன்னணியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கரூரில்: கரூரில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

கரூா் வட்டாரத்தில் எண்ம முறையில் பயிா் கணக்கெடுப்பு

கரூா் வட்டாரத்தில் எண்ம (டிஜிட்டல்) முறையில் பயிா்க் கணக்கெடுப்புப் பணியை புதன்கிழமை வேளாண் இணை இயக்குநா் ஆய்வு செய்தாா். கரூா் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் எண்ம முறையில் பயிா்க் கணக்கெடுப்பு... மேலும் பார்க்க