வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராமசபைக் கூட்டம் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்
அடிப்படை வசதிகள் கோரி, வீடுகளில் கருப்புக்கொடியேற்றி கிராமசபைக் கூட்டத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை புறக்கணித்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிந்தலவாடி வீரணம்பட்டியில் காரவனத்தான் கோயில் தெருவில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு சாலை, குடிநீா், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளின்றி அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியினா் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லையாம்.
இதனால், மாவட்ட நிா்வாகத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வியாழக்கிழமை வீரணம்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தையும் புறக்கணித்த அப்பகுதியினா் வீடுகளில் கருப்புக்கொடியேற்றியும் தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.