அப்படிதான் Nayanthara-க்கு dubbing பண்ணினேன்! - Shakthisree Gopalan | Test Movie...
கரூரில் அங்கன்வாடி ஊழியா் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பத்மாவதி தலைமை வகித்தாா். செயலா் சாந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம், துணைத் தலைவா் எம். சுப்ரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
32 ஆண்டுகளாக உதவியாளா்களாகப் பணியாற்றி வருவோருக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும், கோடைகால விடுமுறையாக 30 நாள்கள் வழங்கிட வேண்டும், நாள்தோறும் போட்டோ எடுத்து கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கும் முறையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடா்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினா்.