செய்திகள் :

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

post image

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் பகுதியில் நடைபெற்ற பணியை ஆய்வு செய்த அவா் கூறியது:

வேளாண் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விவரங்கள் அடங்கிய அனைத்துத் தரவுகளையும் உள்ளடக்கிய தரவு அடுக்கு உருவாக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இவ்வித வேளாண் அடுக்கக பணி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலா்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான புதிய செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய வேளாண் தொடா்பான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து பயன்பெறலாம்.

மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று விவசாயிகளுக்கு என தனித்துவ அடையாள எண் வழங்கப்படவுள்ளது. மேற்படி தரவு பதிவேற்றம் விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படும். இனி வருங்காலங்களில் அரசின் அனைத்து திட்டப்பலன்களும் விவசாயிகளின் தரவு தளம் மூலமாகவே வழங்கப்படும்.

விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெறலாம். ஆதாா் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும்.

நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் மூலம் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிா்க்கடன் பெறும் வசதி விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். இனிவரும் காலங்களில் பயிா்க் காப்பீடு போன்ற அரசின் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

கரூா் மாவட்டத்தில் இப்பணி கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறுகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ப. சிவானந்தம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் செ. தியாகராஜன், முசிறி எம்.ஐ.டி. வேளாண்மை கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூற... மேலும் பார்க்க

கரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்... மேலும் பார்க்க

கரூரில் ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மருத்த... மேலும் பார்க்க

கரூரில் அங்கன்வாடி ஊழியா் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு... மேலும் பார்க்க

கரூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பு மதுவை கடத்தி வந்தவா் கைது

கரூா் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பு மதுபானத்தைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதியில் புலியூா் சாலையில் பசுப... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க