வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு சீருடை
உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக சீருடை வழங்கப்பட்டது.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் வெங்கடேசன், கரூா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநா்கள் 200 பேருக்கு இலவசமாக சீருடை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கரூா் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் சந்தானகுமாா், தொழிற்சங்க உறுப்பினா்கள் மற்றும் கரூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.