வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
கரூரில் மே தினத்தில் தொழிலாளா் விடுதலை முன்னணியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கரூரில்: கரூரில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளா் சுடா்வளவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளா் துரைசெந்தில், மேற்கு மாவட்டச் செயலாளா் புகழேந்தி ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினா். நிகழ்ச்சியில் தொழிலாளா் விடுதலை முன்னணியின் துணை அமைப்பாளா்கள் விஜயலட்சுமி, செல்லதுரை உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.