ஒடிஸா: மற்றொரு நேபாள மாணவி தற்கொலை
ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) 20 வயதான நேபாள மாணவி ஒருவா் விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி ஒருவா் கடந்த கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா். இரு பெண் அதிகாரிகள் திட்டியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, சக நேபாள மாணவா்களும் பிற மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், தற்போது அதே கல்வி நிலையத்தில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பி.டெக் கணினி அறிவியல் படித்து வரும் அந்த மாணவியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகஅந்த மாநில காவல் துறையினா் கூறினா்.
இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.