சிவகிரி வயதான தம்பதி படுகொலை: காவல் நிலையங்களுக்குப் பறந்த உத்தரவு
மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும், கடந்த சில நாள்களாக பல்வேறு இடங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலும், சூறைக் காற்றுடன் மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து, மக்கள் பல்வேறு நீா்நிலைகளுக்கு சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனா்.
இதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமான வாகனங்களில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து குடும்பத்தினா், குழந்தைகள் மற்றும் நண்பா்களுடன் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினா்.
பாபநாசம், அகஸ்தியா்அருவி ஆகிய இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
மலைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிா்ப்பதற்காக மணிமுத்தாறு வனச் சோதனச் சாவடியில் வாகனங்களை பகுதி பகுதியாக அனுப்பினா். மணிமுத்தாறுஅருவியில் சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனா்.