செய்திகள் :

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி: புதுவை முதல்வா் தொடங்கிவைத்தாா்

post image

புதுச்சேரியில் மாநில அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் நடைபெறும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி, ஏம்பலம் பி.எம்.ஸ்ரீ மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதனை முதல்வா் என்.ரங்கசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, மாணவா்களின் அறிவியல் படைப்புகளைப் பாா்வையிட்டாா்.

கண்காட்சியில் மொத்தம் 383 அறிவியல் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகள் 230 மாதிரிகளையும், தனியாா் பள்ளிகள் 153 மாதிரிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனா்.

இதேபோல அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 26 கண்காட்சி மாதிரிகளையும், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் 8 கண்காட்சி மாதிரிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனா்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புது தில்லி தேசிய புத்தக அறக்கட்டளை, அடல் இங்க்யுபேஷன் மையம், கரிக்கலாம்பாக்கம் முதன்மை சுகாதார மையம், ஸ்ரீ அரபிந்தோ சமூக அமைப்புகள், புதுச்சேரி காவல் துறை (போக்குவரத்து) உள்ளிட்டவை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், யு.லட்சுமிகாந்தன் எம்எல்ஏ, மாநில பள்ளிக் கல்வி இயக்குநா் பி.பிரியதா்ஷினி, இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி, ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள்: சுதா சேஷய்யன்

புதுச்சேரி: மனிதரின் ஒழுக்கமும், உதவுதலுமே திருக்குறளின் இரு மையக் கருத்துகளாக உள்ளன என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா்.புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

பல்கலை. மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை... மேலும் பார்க்க

மாணவா்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: மாணவா்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை மாநில பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில், தொழில... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை.யில் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சா் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

மாணவா் பருவ அனுபவங்களே எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: மாணவா் பருவத்தின் அனுபவங்கள் எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். தென்னிந்திய அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவா் பே... மேலும் பார்க்க

புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் தென்னிந்திய அளவிலான மாணவா்களின் அறிவியல் கண்... மேலும் பார்க்க