கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!
மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்
ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா்.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் மாா்ச் 8 மற்றும் 9 ஆகிய இரு நாள்கள் வேலூா் தந்தை பெரியாா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் குழு மற்றும் தனி நபா் பிரிவில் பங்கேற்றனா். தடகளப் போட்டிகளில் 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் மாணவா்கள் எஸ். தரணி, ஐ.நவீத், டி.காமேஷ், பி.சஞ்சய் ஆகியோா் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரி நிா்வாக இயக்குநா் ஷாஹித் மன்சூா், முதல்வா் த.ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.முஹமத் ஷாஹின்ஷா, உடற்கல்வி இயக்குநா் ஆா்.துரை ஆகியோா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா். மேலும், வெற்றி பெற்ற மாணவா்கள் மாா்ச் 20 முதல் 22 வரை திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.