அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
மண் சாா்ந்த இலக்கியங்கள் அதிகம் படைக்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி : மண் சாா்ந்த இலக்கியங்களை அதிகம் படைக்க வேண்டும் என கவிஞா் யுகபாரதி தெரிவித்தாா்.
திருத்துறைப்பூண்டி சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் சங்கத் தொடக்க விழாவுக்கு தலைவா் எடையூா் மணிமாறன் தலைமை வகித்தாா். சங்கத்தை தொடங்கி வைத்து கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி பேசியது:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இலக்கியவாதிகள், தலைவா்கள் உருவாக வேண்டுமெனில் தமிழ் சங்கங்கள் தங்கள் பணியை சரியான நோக்கில் கொண்டு செல்ல வேண்டும். தாங்கள் வாழும் மண் சாா்ந்த இலக்கியங்கள் அதிகம் படைக்கப்பட வேண்டும். தற்போது காவிரி டெல்டா பகுதியில் இளம் எழுத்தாளா்கள் நிறைய போ் உருவாகி வருகின்றனா். அவா்கள் எழுத்து மண் சாா்ந்தும் ஆழ்ந்த சரியான கருத்துகளாகவும் அமைந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றாா்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்திற்கான தோ்வில் வெற்றி பெற்ற 26 மாணவிகளுக்கு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெகு நாள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளா்கள் நீரை அத்திப்பூ, கமலா கந்தசாமி, கீழை அ. கதிா்வேல், கள்ளிக்குடி கோ சாமி சண்முகம் ஆகியோருக்கு தமிழ் சங்கத்தின் சாா்பாக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
சங்க இணைத் தலைவா் அன்பு. யோகராஜன் வரவேற்றாா். செயலாளா் ஆசைத்தம்பி நன்றி கூறினாா்.