"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" -...
மதச்சார்பின்மை, சோசலிசத்தை தவிர்க்க பாஜக முயற்சி: கார்கே குற்றச்சாட்டு
பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தை தவிர்க்க முயல்வதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
சம்விதான் பச்சாவ் சமவேஷ் நிகழ்ச்சியில் உரையாற்றிய கார்கே,
பாஜக ஆட்சியின் கீழ் பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், இளைஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அரசியலமைப்பை மாற்றுவதே பாஜகவின் நோக்கம். நமது அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை, சோசலிசத்தை தவிர்க்க பாஜக முயற்சிக்கிறது.
ஏழைகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாப்ப காங்கிரஸ் 2006இல் வன உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சட்டத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. தொழில்துறை என்ற பெயரில், பாஜக அரசு அனைத்து இடங்களிலும் காடுகளை அழித்து வருகிறது.
தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவில்லை என்றால் அவர்களை அழித்துவிடுவார்கள். ஒடிசாவில் பாஜக ஆதரவாளர்கள் தலித்துகள் மற்றும் அரசு அதிகாரிகளைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் ஒடிசாவின் கஞ்சத்தில் இரண்டு தலித் ஆண்கள் மொட்டையடிக்கப்பட்டனர், முழங்காலிட்டு நடக்க வைத்தனர். புல் சாப்பிடவும், மாசு படிந்த நீரைக் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
காங்கிரஸ் அரசு இந்தியாவில் 160 பொதுத்துறை நிறுவனங்களை அமைத்ததாகவும், பாஜக ஆட்சியில் 23 நிறுவனங்களைத் தனியார் மயமாக்கியுள்ளது. காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை மோடி தனது நண்பர்களுக்கு விற்கிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, அரசியலமைப்பை மாற்றுவதற்காக 400க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வாக்காளர்களை அவர் வலியுறுத்தினார், பெரிய அளவில் உரிமை கோரும் பாஜக, ஒடிசா, புவனேஸ்வருக்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. பாஜக மாநிலத்திற்கு எதுவும் செய்யாமல் பெருமை பெற விரும்புகிறார்கள். ஆனால், நாங்கள் ஒடிசா மக்களுடன் நிற்கிறோம் என்று அவர் கூறினார்.