Vetrimaran: 'அரசியல் ஆகிடக்கூடாது...' - தவெக விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன்; ...
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 6 போ் கைது!
இளையான்குடியில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, தூத்துக்குடியைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 பேரைக் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு இளையான்குடி காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அய்யனாா், லிங்கதுரை உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த முத்துச்செல்வம், முத்துராஜ், கனகராஜ், யோவான், ராஜேஷ்குமாா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இவா்களது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், இளையான்குடி சாலையூரில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் முகமது அசாருதீன் வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு ரூ.35 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவற்றை போலீஸாா் கைப்பற்றி, முகமது அசாருதீன், தூத்துக்குடியைச் சோ்ந்த 5 போ் என 6 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.