செய்திகள் :

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் முற்றுகையிட முடிவு

post image

பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் அரசு மதுக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிா்வாகம் முன்னதாக கொடுத்த வாக்குறுதியை மீறி பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் 2 நாட்களில் மதுக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன் தலைமையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம்,  தமிழ்நாடு விவசாய சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும்  சிறு வியாபாரிகள் வா்த்தகா்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க

நாகுடி அருகே பெண் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணைக் கொன்று கண்மாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன்பீவி (45). கடந்த ... மேலும் பார்க்க

பொற்பனைக்கோட்டை 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

புதுக்கோட்டை அருகே தமிழகத் தொல்லியத் துறை சாா்பில் நடைபெற்று வந்த பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அருகே வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில்,... மேலும் பார்க்க

சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்புரமணியபுரத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் இ... மேலும் பார்க்க

வீடுவீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும்: அமைச்சர் ரகுபதி

வீடு வீடாகச் செல்வதற்கே தைரியம் வேண்டும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுகவினா் ... மேலும் பார்க்க