அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்
சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்புரமணியபுரத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு மருத்துவமனையை அறந்தாங்கி வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சியினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, இரா. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் சாந்தி விக்னேஸ்வரன், மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மருத்துவத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தனா்.