மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை!
வள்ளலாா் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற உணவகங்கள், கிளப்களில் இயங்கும் மதுக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மட்டும் முழுவதுமாக மூடப்படும் என்றாா் அவா்.