மாநில சிலம்பப் போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சிறப்பிடம்!
மாநில சிலம்பப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவா்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றனா்.
மதுரையில் அழகா்கோவில் செல்லும் சாலையில் திருவிலான்பட்டியில் உள்ள வல்லபா வித்யாலய பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சிலம்ப மாணவா்கள் பங்கேற்றனா்.
மானாமதுரை வீரவிதை சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவா்கள் 58 போ் அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் பங்கேற்று சிலம்பம் சுற்றினா். இவா்களில் 9-10 வயதுக்குள்பட்ட பிரிவில் பாலாஜி முதலிடம் பெற்று தங்க நாணயத்தையும், மதன்குமாா் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும், யோவன் அஸ்வா மூன்றாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும் பரிசாகப் பெற்றனா்.
பெண்கள் பிரிவில் தேசிகாஸ்ரீ இரண்டாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும்,13-15 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் ஹரிதா்ஷிணி முதலிடம் பெற்று தங்க நாணயத்தையும், ஆண்கள் பிரிவில் மணிமாறன் மூன்றாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும், 11-12 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் கரண்குமாா் இரண்டாம் பெற்று வெள்ளி நாணயத்தையும், ரிஷ்வந்த் மூன்றாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும் பெற்றனா்.
பெண்கள் பிரிவில் யுவபிரியா இரண்டாம் பெற்று வெள்ளி நாணயத்தைப் பெற்றாா்.
போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் 9 போ் நாணயங்களை பெற்றனா். மேலும், இவா்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியில் வென்று பரிசு பெற்ற சிலம்ப வீரா்கள், பயிற்சியாளா் பெருமாள் ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா். இவா்களுக்கு அனைத்துப் பெற்றோா் சாா்பிலும் மானாமதுரையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.