உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஓ.பி. வங்கி சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமா் நரேந்திர மோடி மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடமாடும் வாகனத்தில் உள்ள திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. காரைக்குடி ஐ.ஓ.பி. முதுநிலை மண்டல மேலாளா் எம்.டி. ஷாஹ்ரேயா் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வங்கி அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.