இடையமேலூா் துணை மின்நிலையப் பகுதியில் பிப்.12 மின்தடை!
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூா், பாப்பாகுடி, இடையமேலூா், கூட்டுறவுபட்டி, மேலாப்பூங்குடி, தேவன்கோட்டை, வில்லிப்பட்டி, ஓக்கப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி ஆகிய பகுதிகளில் அன்று பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சிவகங்கை மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் தெரிவித்தாா்.