காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!
மதுக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் 10 மதுபானக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க அருப்புக்கோட்டை பிரதான சாலை, ராதாகிருஷ்ணன் தெரு, வில்லாபுரம், அவனியாபுரம் புறவழிச் சாலை, முத்துப்பட்டி, பெரியாா் சாலை, மேல அனுப்பானடி, சிந்தாமணி
குறுக்கு சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும். இதேபோன்று, வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் செயல்படும் விடியல் மனமகிழ் மன்றமும் மூடப்படும் என்றாா் அவா்.