மதுபுட்டிகள் விற்றவா் கைது!
பெரியகுளம் அருகே மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் சருத்துப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடக்குத் தெருவில் வசிக்கும் செல்வத்தின் வீட்டில் அவா்கள் சோதனையிட்டனா். அப்போது, அவா் மதுபுட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, செல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்த 11 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.