Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர்.
திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பெண் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து புஷ்பராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பும்போது ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிண்டி போலீசார் விபத்து குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்