Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சித்ரா (40). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணாகி விட்டது.
இந்நிலையில், வரதராஜன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவரின் மனைவி சித்ரா, இளைய மகளுடன் தானத்துபாளையத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டாா்.
தனியாக வசித்து வந்த வரதராஜன் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு திரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மொடக்குறிச்சியை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள வாய்க்காலில் மதுபோதையில் வரதராஜன் விழுந்துகிடப்பதாக அவரின் மனைவி சித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினா்களுடன் சென்ற சித்ரா, அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றாா்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.