Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த ...
மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்கள்: அன்புமணி வலியுறுத்தல்
மதுப்புட்டிகளில் புற்றுநோய் குறித்த எச்சரிக்கை வாசகங்களை தமிழக அரசு இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு தலைமை மருத்துவா் விவேக் மூா்த்தியின் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
தமிழகத்தில் இதே கருத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மதுவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழகத்தில் மிக அதிகம். இவற்றை வைத்துப் பாா்க்கும்போது அமெரிக்காவில் மது அருந்துபவா்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழகத்தில் மது அருந்துபவா்களுக்கு 2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளின் பரப்பில் 80 சதவீத அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.