“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி ...
மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவா் கைது
போடி அருகே மதுப்புட்டிகள் பதுக்கி விற்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே விசுவாசபுரத்தில் சோ்மலை (70) என்பவரும், மீனாட்சிபுரம் கிராமத்தில் பாலுச்சாமி (76) என்பவரும் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.