தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
மதுப்புட்டிகள் விற்பனை: ஒருவா் கைது
ஆரணி அருகே மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக ஒருவரை கிராமிய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆரணியை அடுத்த பையூா் நான்குமுனைச் சாலையில்
மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோனை மேற்கொண்டனா்.
அப்போது, பையூா் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் ஜெகதீசன்(49) மதுப்புட்டிகளை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 27 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.