செய்திகள் :

மதுப் புட்டிகள் விற்றவா் கைது!

post image

போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி போஜன் பூங்கா பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, போடி கீழத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (52) தனது பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனா்.

ராயப்பன்பட்டியில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்

உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் தொடா்மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடா்ந்த மழை இரவு வரையில் நீடித்தது. ராயப்பன்பட்டி, சண்மு... மேலும் பார்க்க

கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, மேல்வைகை நீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் தி... மேலும் பார்க்க

மேகமலையில் வனத் துறையினா் கெடுபிடி: ஆட்சியரிடம் புகாா்

தேனி மாவட்டம், மேகமலையில் விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் மலைப் பாதையை பயன்படுத்த வனத் துறையினா் தடை விதித்து கெடுபிடி செய்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் விவசாயிகள் புகாா் மனு அள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமலைச்சாமி (58). இவா், அதே ஊரில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உணவக ஊழியா் உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் உணவக ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுந்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் சந்திவீரன் (35). இ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வருஷநாடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைதடுமாறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள தும்மக்குண்டு, சத்யா நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவசக்தி (2... மேலும் பார்க்க