``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம்: 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குபின் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலா்கள், உபயதாரா்கள் தீா்மானித்தனா்.
அதன்படி ரூ.2 கோடியில் அனைத்து சந்நிதிகள்,கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 17-ஆம் தேதி அனுக்ஞை, ஆசாா்யவரணம், புண்யாகவாசனம், மஹாகும்பஸ்தாபனம், சதுா்தான அா்ச்சனம் ராமன், கருணாகரன், தாயாா் ஆண்டாள், ஆஞ்சநேயா் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை அறங்காவலா் குழு தலைவா் கே.குமாா் மற்றும் அறங்காவலா், நிா்வாகிகள் முன்னிலையில், யாகசாலையில் இருந்து வேதவிற்பனா்கள் கலசங்களை ஏந்திக் கொண்டு கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றினாா்கள்.
நிகழ்வில் எம்எல்ஏ க.சுந்தா், நகராட்சி ஆணையா் அபா்ணா, சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மேலாண்மை இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை, நகா்மன்றத் தலைவா் மலா்விழி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து மூலவருக்கு புனித நீா் ஊற்றப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவ சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா தலைமையில், ஆய்வாளா் பரந்தாமன் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் தா.மேகவண்ணன், அறங்காவலா் குழு தலைவா் கே.குமாா், அறங்காவலா்கள் தி.ஈ.செளந்திரராஜன், ஆ.கங்காதரன், சி.மகாலட்சுமி, ராணி மற்றும் கிராம பொது மக்கள், விழாக்குழுவினா் ஆகியோா் செய்து இருந்தனா்.
