Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.80 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 7-ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக யாகசாலையில் இருந்து புனித கலசங்களை அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா், உத்தரமேரூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அா்ச்சகா் கே.ராஜப்ப சிவாச்சாரியா் ஆகியோா் ஏந்தி கோயிலை வலம் வந்தனா். பின்னா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றினா்.
கூடிஇருந்த பக்தா்கள் ஓம் நமசிவாய என முழங்கினா். அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை, சுவாமி திருக்கல்யாணம், பஞ்சமூா்த்தி திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், நகா்மன்ற தலைவா் மலா்விழி, மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா, வேலூா் கோட்டாட்சியா் மாலதி, நீதிபதிகள் பாஸ்கா், சரிதா, கணேசன், தேவபிரியா, நகராட்சி ஆணையா் அபா்ணா தேவி, நகராட்சி பொறியாளா் நித்யா, வட்டாட்சியா் சொ.கணேசன், வருவாய் ஆய்வாளா் பிரேமா உள்பட பலா் கலந்து கொண்டனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.