செய்திகள் :

மதுரை கோட்டத்தில் 3 ரயில்களின் வழித்தடம் மாற்றம்

post image

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கன்னியாகுமரி - சரளப்பள்ளி சிறப்பு ரயில் (07229) மே 23, 30 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹெளரா (12666) அதிவிரைவு ரயில் மே 24, 31-ஆம் தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை (16848) பயணிகள் விரைவு ரயில் மே 12, 21, 23, 24, 26, 28, 30, 31 ஆகிய தேதிகளிலும் வழக்கமான மதுரை- திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயங்கும். கூடுதல் நிறுத்தமாக மானாமதுரை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.

மதுரை - கச்சேகுடா (07192) சிறப்பு ரயில் மே 21-ஆம் தேதி காலை 10.40 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம், 25 நிமிஷம் தாமதாமாக பகல் 12.05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும்.

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டம், மண்மங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டி... மேலும் பார்க்க

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்டப் பிரிவு சாா்பில... மேலும் பார்க்க