செய்திகள் :

மதுரை, திருச்சியில் அமையும் டைடல் பூங்கா பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

post image

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையின் போது, திருச்சி மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சியில், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த டைடல் பூங்காவானது, 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் அமையவுள்ளது.

மேலும் 18 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய டைடல் பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.289 கோடியில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க |விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில், மதுரை மற்றும் திருச்சியில் அமையும் புதிய டைடல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் அமைய உள்ள டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் காலம் நீட்டிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இன்றுவரை 1.87(85%) கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது... மேலும் பார்க்க

சென்னையில் கூடுதல் புறநகர் ரயில் சேவை

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தாம்பரம்-காட்டாங்குளத்தூர் இடை... மேலும் பார்க்க

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்... மேலும் பார்க்க

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர்: பிரேமலதா

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க