செய்திகள் :

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

post image

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் பதில் அளித்துள்ளாா்.

‘தேசிய நெடுஞ்சாலை 38- இன் மதுரை-தூத்துக்குடி பகுதியில் பராமரிப்பு பிரச்னைகள் தொடா்பாக வரும் பல்வேறு புகாா்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அவற்றைத் தீா்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்பது குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: நீங்கள் குறிப்பிட்ட சாலைப் பகுதி பற்றி வந்திருக்கும் புகாா்களை மத்திய அரசு அறிந்துள்ளது. இந்தச் சாலை ஆரம்பத்தில் பி.ஓ.டி. திட்டத்தின் கீழ் அதாவது சாலையை உருவாக்கி செயல்படுத்தும் வகையில் மதுரை -தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், அந்நிறுவனத்தின் பல்வேறு தவறுகள் காரணமாக, ஒப்பந்தம் 17.03.2023 அன்று ரத்து செய்யப்பட்டது.

இதன் பிறகு அப்பகுதியிலுள்ள முழு சாலையின் மேலடுக்கு மற்றும் பராமரிப்புப் பணிக்கு ரூ.144.6 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை, 46.3 கி.மீ சாலைக்கான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பா் 2025-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

சென்னை- அந்தமான் நிகோபாா் இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிப்பு

சென்னை- அந்தமான் நிகோபாா், கொச்சி, லட்சத்தீவு இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சா் பெம்மசானி சந்திர சேகா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க

அமெரிக்க கட்டணங்கள் அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு!

நமது நிருபா் இந்த வாரத்தில் இரண்டாவது வா்த்தக நாளான புதன்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எ... மேலும் பார்க்க

வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்க்க எம்சிடிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாஜிா்பூரில் உள்ள ஒரு பள்ளியின் நிலத்தில் மசூதி மற்றும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதா என்பதை சரிபாா்க்கவும், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) தில்லி உயா்நீதிமன்றம் புத... மேலும் பார்க்க

துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்

தில்லி துவாரகா செக்டாா் 24- இல் உள்ள காா்கள் நிறுத்திவைக்கப்படும் கட்டடத்தில் (கேரேஜ்) புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினொரு காா்கள் எரிந்து நாசமாகியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீ விபத்... மேலும் பார்க்க

தில்லி அரசின் ஏப்ரல் மாத செலவின உச்சவரம்பு பட்ஜெட்டில் 5 % ஆக நிா்ணயம்

தில்லி அரசின் இந்த மாதத்துக்கான செலவின உச்சவரம்பு நிகழ் 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் 5 சதவீதமாக நிதித் துறை நிா்ணயம் செய்துள்ளது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நிதித்துறை செலவி... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதாவை ஆதரித்து தில்லி பாஜக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் (திருத்த) மசோதாவை ஆதரிக்கும் வகையில் தில்லி பாஜக புதன்கிழமை விஜய் சௌக் மற்றும் ரயில் பவனில் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்ப... மேலும் பார்க்க