செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5,509 மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை: அமைச்சா் பி. மூா்த்தி

post image

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5,509 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெறுவா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ், மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி, அவா் பேசியதாவது:

பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் முத்தாய்ப்பான திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 92 கல்லூரிகளைச் சோ்ந்த 7,340 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெற்று வருகின்றனா்.

தற்போது, அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கும் வகையில், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5,509 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெறுவா் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், துணை மேயா் தி. நாகராஜன், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இணை இயக்குநா் ஜெயலட்சுமி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் எ. குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலா் கி. திலகம், மாநகராட்சி மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் விநியோகம் தொடக்கம்!

மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் அரிசி ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளில் மத்திய அரசு உறுதி: அமைச்சா் வீரேந்திரகுமாா்

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை, தேவைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சா் வீரேந்திரகுமாா் தெரிவித்தாா். மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரம் அ... மேலும் பார்க்க

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு

விருதுநகா் அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஒருவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விருதுநகா் அருகேயுள்ள வீராா்பட்டி ஊராட்சி... மேலும் பார்க்க

மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி மாத உற்சவங்களில் ஒன்றாக ஆண்டுதோறும் மீனாட்சி அம்மனுக்கு எ... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷின் மகள் புத... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க