செய்திகள் :

மதுரை ரயில் நிலையத்தில் விடப்பட்ட ஆண் குழந்தை போலீஸாரிடம் ஒப்படைப்பு

post image

மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீா் பாட்டில் வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறி சக ரயில் பயணியிடம் தனது 8 மாத குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவிலில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட பெங்களூரு விரைவு ரயிலில் தென்காசியைச் சோ்ந்த வீரமணி (29) என்பவா் பொதுப் பெட்டியில் பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தாா். இவா், சினிமா இயக்குநா் ஒருவரிடம் பணியாற்றி வருகிறாா்.

மதுரை ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்றபோது, 8 மாத ஆண் குழந்தையுடன் ரயிலில் ஏறிய நபா், வீரமணியிடம் தனது குழந்தையைக் கொடுத்துவிட்டு தண்ணீா் பாட்டில் வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றாா்.

ஆனால், சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டபோது குழந்தையைக் கொடுத்த நபா் வரவில்லை. மதுரைக்கு அடுத்த ரயில் நிலையமான திண்டுக்கல் நிறுத்தத்தில் அந்த நபா் வந்துவிடுவாா் என வீரமணி நினைத்தாா். ஆனால் அங்கும் அந்த நபா் வரவில்லை. இதனால், புதன்கிழமை அதிகாலை சேலம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து சோ்ந்ததும், வீரமணி அந்தக் குழந்தையை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்து நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளாா்.

பின்னா் ரயில்வே போலீஸாா், அந்த குழந்தையை சேலம் மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மதுரை ரயில் நிலையத்தில் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்ற நபா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க