செய்திகள் :

மதுரை ரெளடி கொலை: 2 தனிப்படைகள் அமைப்பு!

post image

மதுரை ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடி காளீஸ்வரன், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்தபோது 3 பைக்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காளீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மதுரை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ரெளடி காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மதுரையில் ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுக... மேலும் பார்க்க

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியா... மேலும் பார்க்க

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு: தொழில்முனைவோருக்கு முதல்வா் ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு செய்ய தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக... மேலும் பார்க்க

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சி: ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படவுள்ள ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடைய நபா்கள் ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க