செய்திகள் :

மதுரை: 22 ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலைகள்; அதிர வைக்கும் அடுத்த சாப்டர்; பின்னணி என்ன?

post image

'அடக்க முடியாத கோபத்தைக் கட்டி வை, காலம் உன்னிடம் வரும்போது ஒருவனையும் விடாதே... கருவறு..." - சமீபத்தில் மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் நண்பர்கள் முகநூலில் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு இது.

அந்தளவுக்குப் பகையும், கொலைவெறியும் தலைக்கேறிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளைக்காளியின் நண்பர்கள்.

சுபாஷ் சந்திரபோஸ்

மதுரையில் கடந்த 22 ஆண்டுகளாகப் பழிக்குப் பழியாகக் கொலை செய்வதையும், அதற்காகத் திட்டமிடுவதையுமே முழுநேர வேலையாக வைத்துச் செயல்படும் வி.கே.குருசாமி தரப்புக்கும், ராஜபாண்டி தரப்புக்கும் இடையே உருவான பகை, இதுவரை 22 கொலைகளாக நீண்டிருக்கிறது.

சமீபத்தில் வி.கே.குருசாமியின் உறவினரான 'கிளாமர் காளி' என்ற காளீஸ்வரன் கொலை செய்யப்பட, அந்த வழக்கில் வெள்ளைக்காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டு குழுக்களும் கொலை வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டு குழுக்களைப் பற்றி நன்கு அறிந்த போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, "ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகிய இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் குடியேறினார்கள்.

உறவினர்களான இவர்கள் கீழ்மதுரை பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து என்று ஈடுபட்டு, தி.மு.க-வில் வி.கே.குருசாமியும், அ.தி.மு.க-வில் ராஜபாண்டியும் முக்கிய பொறுப்பில் அமர்ந்து பின்பு மாநகராட்சி மண்டலத் தலைவர்களாகவும் ஆனார்கள்.

அரசியல் ரீதியாக இருவருக்குமிடையே ஏற்பட்ட சிறு பிரச்னை, இருதரப்பு மோதலாக மாறிய நிலையில்தான், 2003-ல் ராஜாபாண்டியின் அண்ணன் மகன் சின்னமுனீஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வி.கே.குருசாமி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம்தான் பழிக்குப்பழி கொலைகளுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

என்கவுன்ட்டர்

2008-ம் ஆண்டு சின்னமுனீஸ் கொலை வழக்கில் தொடர்புடைய வழுக்கை முனீஸை, ராஜாபாண்டியின் உறவினர் சப்பாணி முருகன் கொலை செய்ய, அதே ஆண்டு சின்ன முனீஸின் தம்பி வெள்ளைக்காளி, நண்பன் சகுனி கார்த்திக்குடன் சேர்ந்து வி.கே.குருசாமியின் உறவினர்களான மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகியோரை கொலை செய்து சிறைக்குச் சென்றனர்.

அன்று முதல் ராஜபாண்டியின் மறைவுக்குப் பின்பும் வி.கே.குருசாமி தரப்புக்கு எதிராகத் தொடர் அட்டாக்குகளை வெள்ளைக்காளி நடத்தி வருகிறார்.

இதற்கிடையே 2018-ல் வெள்ளைக்காளியின் நண்பர்களான சகுனி கார்த்திக்கும், முத்து இருளாண்டியும் என்கவுண்டரில் கொல்லப்பட, மேலும் உக்கிரமாகி இரண்டு தரப்பினரும் மாறி கொலைகளைச் செய்து வருகின்றனர்.

அதன் நீட்சியாக 2023-ம் ஆண்டு பெங்களூருவிலிருந்த வி.கே.குருசாமி, வெள்ளைக்காளியின் நண்பர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்று மீண்டுள்ளார்.

இந்நிலையில், மதுரை தனக்கன்குளத்தில் மார்ச் 23 -ம் தேதி குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த, இந்த வழக்கில் சிவகங்கை பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், மதுரை நந்தகுமார், நவீன்குமார், சென்னை கார்த்திக், திருப்பூர் அசன் ஆகியோருடன் வெள்ளைக்காளியின் தாயார் 60 வயதான ஜெயக்கொடியும் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை மதுரை ரிங் ரோடு அருகே காரில் வந்தபோது கைது செய்யத் தடுத்த போலீசார்களை அரிவாளால் வெட்டி, துப்பாக்கியால் சுட முயன்றபோது போலீசால் சுடப்பட்டு அவர் இறந்துள்ளார்" என்றனர்.

வீரபத்திரன்

சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

"உடலை வாங்க மாட்டோம்" என்று மறுத்த சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன், "என் மகன் வேறொரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்து கையெழுத்திட்டு வந்தான்.

'வெளியில் வராதே, காளீஸ்வரன் கொலை வழக்கில் கைது செய்துவிடுவார்கள்' எனத் தெரிந்த போலீஸ்காரர் எச்சரித்ததால், என் மகன் கோயம்புத்தூருக்குச் சென்றான். இனி திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்திருந்த நிலையில், அவனை என்கவுண்டர் செய்துள்ளனர்.

தவறே செய்திருந்தாலும் காலில் சுட்டிருக்கலாம், எதற்காகக் கொல்ல வேண்டும்? காளீஸ்வரன் கொலை நடந்ததாகச் சொல்லப்படும் அன்று சாயல்குடியில் நடந்த எங்கள் உறவினர் வீட்டு விசேஷத்தில் என் மகன் கலந்துகொண்டதற்கு ஆதாரம் உள்ளது.

வெளியூருக்குச் சென்றவனைப் பிடித்துச் சுட்டுக்கொன்று மதுரையில் போட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், காவல்துறையினர் பதவி உயர்வு பெறுவதற்காக என்கவுன்டர் செய்துள்ளனர். உறவினர்களான இரண்டு தரப்பினரையும் மோத விடுவதே காவல்துறையினர்தான்" என்றார்.

பின்னர் சமாதானப்படுத்தி உடல் ஒப்படைக்கப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ் என்கவுன்டரில் எழுப்பப்படும் சந்தேகங்கள், சர்ச்சைகள் குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் கேட்டோம்.

"அவர்கள் தரப்பில் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், அதற்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது. இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியுள்ளார். சுபாஷ் சந்திரபோஸுக்கு இந்தக் கொலை சம்பவத்திலும் பல்வேறு வழக்குகளிலும் தொடர்புள்ளது.

காரில் கஞ்சா கடத்துவதாகவும் வந்த தகவலால், அவரைக் கைது செய்ய முயன்ற நிலையில், போலீசாரை வெட்டியும், இன்ஸ்பெக்டரைச் சுட முயன்றுள்ளதால்தான் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மதுரையில் இனி குழு மோதல்கள் நடக்காத வகையில் இரண்டு தரப்பினரும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள்" என்றார்.

கமிஷனர் லோகநாதன்

இரண்டு தரப்பில் நடந்தது வரும் பழிக்குப்பழி சம்பவங்களில் இதுவரை வெள்ளைக்காளி தரப்பில்தான் 3 பேர் போலீசால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் ஏற்பட்ட பழக்கம் மூலமும் வெளியே சுற்றிவரும் நண்பர்கள் மூலமும் வெள்ளைக்காளி சிறையில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, அடுத்து என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் காவல்துறை சிறப்புப் பிரிவினருக்குப் பெரும் சவாலாக உள்ளது.

கொலைப்பட்டியல் :

2003 : ராஜாபாண்டியின் உறவினரும் வெள்ளைக்காளியின் சகோதரருமான சின்ன முனீஸ் கொலை. வி.கே.குருசாமி உள்ளிட்டோர் கைது.

2008 : குருசாமி ஆதரவாளர் வழுக்கை முனீஸ் ராஜபாண்டி தரப்பினரால் கொலை.
 
2008 : குருசாமியின் உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தியை வெள்ளைக்காளியும், சகுனி கார்த்திக்கும் கொலை செய்கிறார்கள்.

2013 : வி.கே குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை வெள்ளைக்காளி, சகுனி கார்த்திக், முத்திருளாண்டி ஆகியோர் கொலை செய்கிறார்கள்.

2013 :  சகுனி கார்த்தியின் மாமன் மயில்முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குருசாமியின் மகன் மணி உள்ளிட்டோர் கைது.

2015 : குருசாமி தரப்பில் குப்பு என்ற முனியசாமி கொலை. வெள்ளைக்காளியும், ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனியசாமி கைது.

2016 : குருசாமியின் உறவினர் காட்டு ராஜா, கமுதியில் வெள்ளைக்காளி தரப்பினரால் கொலை.

2017 : ராஜபாண்டியனின் மகன் தொப்பிலி் முனியசாமி கொலை. குருசாமியின் மகன் மணி கைது.

வி.கே.குருசாமி, ராஜபாண்டி

2017: குருசாமியின் ஆள் சடையாண்டியைச் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி கொலை செய்தனர்.

2018 : குருசாமியைக் கொல்ல பதுங்கியிருந்ததை அறிந்து சகுனி கார்த்திக், முத்து இருளாண்டியை போலீஸ் என்கவுன்டர் செய்தனர்.

2018 : குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டிக்குப் பதிலாக முனியசாமி என்பவர் கொலை.

2019 : எம்.எஸ்.பாண்டியையும் வெள்ளைக்காளி தரப்பு கொலை செய்தனர்.

2020 : வெள்ளைக்காளியின் நண்பர் முத்துப்பாண்டி கொலை.

2020 : குருசாமி தரப்பில் முருகானந்தம் கொலை

2023 : பெங்களூருவில் வி.கே.குருசாமி மீது கொலை முயற்சி.

2025 : குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை.

2025 : வெள்ளைக்காளி தரப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டர்...

இது தவிர்த்து இன்னும் சில கொலைகள், நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள், வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்து ஏற்பட்ட மரணங்கள் எனப் பல சம்பவங்களும் நடந்துள்ளன. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``நவராத்திரியில் மாதவிடாய்; விரதம் இருக்க முடியவில்லை..'' - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் பிரியன்ஷா சோனி (36). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த 30-ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட முடிவு... மேலும் பார்க்க

வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!

நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும... மேலும் பார்க்க

'டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்' - கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சியம் காட்டியதா போலீஸ்?

டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற சைபர் க்ரைம் மோசடி நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் போலி அதிகாரிகள் வீடியோ கால் மூலம் வந்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்நிலையில் போலி அதிகாரி... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் - ஆடி கார் சேதம்!

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக கோவையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்படும் பாலங... மேலும் பார்க்க

திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்... மேலும் பார்க்க

”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் பின்னணி என்ன?

தர்மபுரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் நெப்போலியன்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன்(68... மேலும் பார்க்க