மது பாட்டில்களை விற்பனை செய்தவா் கைது
பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, வி. களத்தூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மேட்டுப்பாளையம்- சாத்தனவாடி சாலையில் அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சரவணனை (29) கைது செய்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.